Rahul Dravid
உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரிப் பங்கேற்றது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
Shubman Gill-Rahul Dravid
உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மீண்டும் வரும் டி20 உலகக் கோப்பை வரையில் அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக பிசிசிஐ கொண்டு வந்தது. தென் ஆப்பிரிக்கா தொடர் மூலமாக ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
Rohit Sharma Rahul Dravid
இந்த நிலையில், நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆவது போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டு டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று கைப்பற்றியது.
Rahul Dravid
இதையடுத்து 17ஆம் தேதி நாளை முதல் 21 ஆம் தேதி வரையில் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருக்கிறது. இதில், ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்க மாட்டார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் மட்டுமின்றி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் என்று யாரும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படமாட்டார்கள்.
Team India Test
டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி வீரரர்கள் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவிற்கு வந்துள்ளனர். அவர்கள் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் பங்கேற்க இருக்கும் நிலையில், ராகுல் டிராவிட் அண்ட் கோ டெஸ்ட் பயிற்சி கொடுக்க இருப்பதால், ஒருநாள் தொடருக்கான பயிற்சியாளராக இருக்க மாட்டார்கள்.
Indian Team Head Coach Rahul Dravid
இதுவரையில் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
Rahul Dravid
ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக இருந்துள்ளார். விவிஎஸ் லட்சுமணன் மட்டுமின்றி, சிதான்ஷூ கோடக் (பேட்டிங் பயிற்சியாளர்), அஜய் ராத்ரா (பீல்டிங் பயிற்சியாளர்), ராஜீப் தாத்தா (பவுலிங் பயிற்சியாளர்) ஆகியோரும் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், முகமது ஷமி (உடல்தகுதியை பொறுத்து இடம் பெறுவார்)