South Africa vs India Test Series
இந்தியாவில் நடந்த 13ஆவது உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து சீனியர் வீரர்கள் முதல் ஒரு சில வீரர்கள் ஓய்வில் இருந்தனர். அதில், ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஓய்வில் இருந்தனர்.
Mohammed Shami
இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை 4-1 என்று கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
Shami
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆவது போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடரை தீர்மானிக்கும் 3 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Mohammed Shami
டி20 தொடரில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடினர். வரும் 17ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இதையடுத்து 26 ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.
Team India
டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது ஷமியும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் தற்போது டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். கணுக்கால் காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால், அவர் உடல் தகுதி பெறாதநிலையிலும் இந்த தொடரிலிருந்து விலகியதாக கூறப்பட்டுள்ளது.
Indian Cricket Team
ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியைத் தவிர்த்து எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் நேற்று தென் ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றனர். இதில், துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
SA vs IND Test Series
இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஆகியோர் ஒருநாள் தொடருக்கு பயிற்சியாளராக இருக்கமாட்டார்கள். மேலும், டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த இருப்பதால், ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Shami Ruled out from Test Series
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி (உடல்தகுதியைப் பொறுத்து), முகேஷ் குமார், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.
Mohammed Shami Ruled Out
ஏற்கனவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் தான் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் பயிற்சியை தொடங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.
குறிப்பு: உடல்தகுதி பெறாத நிலையில் டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகியுள்ளார்.