IND vs BAN Test: வங்கதேசத்திற்கு எதிராக 5 சாதனைகளை முறியடிக்கும் தமிழக சுழல் சூறாவளி ரவிச்சந்திரன் அஸ்வின்!

First Published | Sep 16, 2024, 9:43 PM IST

Ravichandran Ashwin Records: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விதமான சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் உள்ளிட்ட பல சாதனைகளை அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Ravichandran Ashwin

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விதமான சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார். அது என்னென்ன சாதனைகள் என்று இந்தப் பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாங்க…

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெற்றியோடு முடித்து வரலாற்று சாதனை படைத்த கையோடு வங்கதேச அணி இந்தியாவில் கால் பதிக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ravichandran Ashwin

இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் அஸ்வின் பல சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார். அது என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க…

கடைசியாக இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்றது. இதில், டெஸ்ட் தொடரை வென்றது. இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை படைத்தார். இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தான் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 சாதனைகளை படைக்க இருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க…

Tap to resize

IND vs BAN Test, Ravichandran Ashwin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) அதிக விக்கெட்டுகள்:

ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரையில் 35 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) விளையாடி 174 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றினால், ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயானின் 187 விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WTC 2023-25 ​ல் அதிக விக்கெட்டுகள்:

தற்போது வரையில் 42 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள அஸ்வின், வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றினால், ஆஸி வீரர் ஜோஷ் ஹாசல்வுட்டின் 51 விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ravichandran Ashwin, IND vs BAN Test

WTCல் அதிக 5 விக்கெட்டுகள்:

அஸ்வின் 34 WTC போட்டிகளில் 10 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வங்கதேச டெஸ்ட் தொடரில் ஒரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 10 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த நாதன் லியான் சாதனையை முறியடிப்பார்.

ஜாகீர் கானின் சாதனையை முறியடிக்கும் அஸ்வின்:

வங்கதேசத்திற்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 3 நாட்களில் தொடங்கும் வங்கதேச டெஸ்ட் தொடரில் அஸ்வின் இடம் பெற்று விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்தால் 31 விக்கெட்டுகள் என்ற ஜாகீர் கானின் சாதனையை முறியடிப்பார்.

Ravichandran Ashwin Records

இந்தியாவில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள்:

அஸ்வின் இந்தியாவில் 126 சர்வதேச போட்டிகளில் விளையாடி 455 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வங்கதேச டெஸ்ட் தொடரில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றினால், சொந்த மண்ணில் 476 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்ப்ர), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.

வங்கதேசம்:

நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), ஷாகீப் அல் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகீர் ஹசன், ஷத்மன் இஸ்லாம், மெஹிடி ஹசன் மிராஸ், மஹிமுல் ஹக், முஷிபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), லிட்டன் குமார் தாஸ் (விக்கெட் கீப்பர்), தைஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, நஹித் ராணா, சையது கலீத் அகமது, ஜாகெர் அலி அனிக்

Latest Videos

click me!