ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸும், முதல் முறையாக கோப்பையை வெல்ல துடிக்கும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன.
இன்று இரவு சென்னையில் 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளுமே இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்த போட்டி குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், அனைத்து அணிகளுமே வலுவான அணிகள் தான். ஆனால் நான் நழுவும் வகையில் பேச விரும்பவில்லை. மும்பை அணி தான் பவர்ஃபுல்லான மற்றும் அனுபவத்திலும் சிறந்த அணி. மும்பை அணி எப்போதுமே சீசனை வெற்றிகரமாகத்தான் தொடங்கும். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெல்லும் என தெரிவித்துள்ளார்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:ரோஹித் சர்மா(கேப்டன்), கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், பியூஷ் சாவ்லாஜெயந்த் யாதவ், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.