#IPL2021 தல தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.! கடைசி நேரத்தில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரை தட்டி தூக்கிய சிஎஸ்கே

First Published Apr 9, 2021, 2:06 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே அணியிலிருந்து விலகிய ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஹேசில்வுட்டுக்கு மாற்று வீரராக மற்றொரு ஆஸி., ஃபாஸ்ட் பவுலரும் மும்பை இந்தியன்ஸின் முன்னாள் வீரருமான ஜேசன் பெஹ்ரென்ஃபார்ஃபை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி.
 

ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்குகிறது. சென்னையில் இன்று நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும், ஆர்சிபியும் மோதுகின்றன. சிஎஸ்கே அணி நாளை(10ம் தேதி) முதல் போட்டியில் ஆடுகிறது. முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது.
undefined
கடந்த சீசனில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் மீண்டும் செம கம்பேக் கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் சோர்ந்துபோன சிஎஸ்கே ஃபாஸ்ட் பவுலர் ஹேசில்வுட், ஐபிஎல்லின்போதும் பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும் என்பதால், கடைசி நேரத்தில் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
undefined
ஏற்கனவே 10 மாதம் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த நிலையில், ஐபிஎல்லுக்கு பின், ஆஸி., அணியின் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச சுற்றுப்பயண, டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஓராண்டுக்கு தொடர்ச்சியாக முக்கியமான போட்டிகள் இருப்பதால், இதற்கிடையே ஐபிஎல்லிலும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது சோர்வை ஏற்படுத்தும்.
undefined
எனவே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஃப்ரெஷ்ஷாக இருக்க ஒரு ஓய்வு தேவைப்படுவதாகவும், தனது வீட்டில் குடும்பத்தினருடன் சில காலம் இருக்க விரும்புவதாகவும் கூறி ஹேசில்வுட் ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகினார்.
undefined
இதையடுத்து அவருக்கு மாற்று வீரரை சிஎஸ்கே அணி அறிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது ஆஸி., இடது கை ஃபாஸ்ட் பவுலரும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பவுலருமான ஜேசன் பெஹ்ரெண்டார்ஃபை ஒப்பந்தம் செய்துள்ளது.
undefined
ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், 2019 ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக 5 போட்டிகளில் ஆடி 5 விக்கெட் வீழ்த்தினார். ஆஸி., அணிக்காக 11 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!