
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 38ஆவது லீக் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், ரோகித் சர்மா 6, இஷான் கிஷான் 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முகமது நபி ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர், 23 ரன்கள் எடுத்திருந்த போது யுஸ்வேந்திர சாஹல் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் திலக் வர்மா உடன் நேஹல் வதேரா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையானார். சாஹல் ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் வீசினார். எனினும் அவர் அரைசதம் அடிக்காமல் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 49 ரன்களில் ஆட்டமிழந்தார். மும்பை அணிக்காக தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து நிதானமாக தொடங்கி அதிரடியாக விளையாடிய திலக் வர்மா அரைசதம் அடித்த நிலையில், 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 65 ரன்களில் சந்தீப் சர்மா பந்தில் வெளியேறினார். அதன் பிறகு வந்த டிம் டேவிட் 3, ஜெரால்டு கோட்ஸி 0 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் பியூஷ் சாவ்லா 1 ரன்னுடனும், ஜஸ்ப்ரித் பும்ரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இவரைத் தொடர்ந்து நிதானமாக தொடங்கி அதிரடியாக விளையாடிய திலக் வர்மா அரைசதம் அடித்த நிலையில், 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 65 ரன்களில் சந்தீப் சர்மா பந்தில் வெளியேறினார். அதன் பிறகு வந்த டிம் டேவிட் 3, ஜெரால்டு கோட்ஸி 0 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் பியூஷ் சாவ்லா 1 ரன்னுடனும், ஜஸ்ப்ரித் பும்ரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார். கடந்த சில போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே இந்தப் போட்டியில் நிதானமாக தொடங்கினார். பட்லர் தனது அதிரடியை தொடங்கினார். போட்டியில் பவர்பிளேயின் கடைசி ஓவரான 6ஆவது ஓவரை அறிமுக வீரர் நுவன் துஷாரா வீசினார். அந்த ஓவரில் 4 பவுண்டரி உள்பட 17 ரன்கள் கொடுத்தார். முதல் 6 ஓவர்களில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கீடு ஏற்பட்டது.
எனினும், பெரிதாக இல்லையென்பதால், சிறிது நேரத்தில் நின்றது. இதன் காரணமாக இரவு 10.33 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 6 ஓவர்கள் வரையில் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் 45/3 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால், ராஜஸ்தான் 61 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் ராஜஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.