ஹா ஹா.. இதெல்லாம் எனக்கு தேவையில்ல.. எல்லா கிரெடிட்டும் பசங்களுக்குத்தான்..! டிராவிட்டின் தன்னடக்கம்

ஆஸி., சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த சிராஜ், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில் ஆகிய வீரர்கள் எல்லாம் ராகுல் டிராவிட்டால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்ற முறையில், டிராவிட்டிற்கு புகழ்ச்சிகள் குவிய, அதை ஏற்றுக்கொள்ளாமல், எல்லா கிரெடிட்டும் பசங்களுக்குத்தான் என்று வழக்கம்போலவே அடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
 

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி, ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ், ஜடேஜா, ஹனுமா விஹாரி, அஷ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் காயத்தால் தொடர்ச்சியாக வெளியேறியபோதிலும், வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், ரிஷப் பண்ட் ஆகிய இளம் வீரர்களை வைத்துக்கொண்டே தொடரை வென்றது இந்திய அணி.
அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், சிராஜ், சுந்தர், ஷர்துல் தாகூர், மயன்க் அகர்வால் உள்ளிட்ட பல இளம் திறமைசாலிகளை மெருகேற்றி இந்திய அணிக்கு கொடுத்தார். இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் யாருமே இல்லாமல் இளம் வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, ராகுல் டிராவிட்டை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் ரசிகர்களும் புகழ ஆரம்பித்தனர்.

ராகுல் டிராவிட் திறமையும் மன உறுதியும் வாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கியதால் தான், அனுபவ நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும் கூட, இளம் வீரர்களை வைத்துக்கொண்டு ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்த முடிந்தது என்பது நிதர்சனமான உண்மை என்றாலும், அதை வழக்கம்போலவே தன்னடக்கத்துடன் ஏற்க மறுத்து, ”எல்லா கிரெடிட்டும் பசங்களுக்கே.. எனக்கு கிரெடிட் கொடுப்பதெல்லாம் தேவையில்லாதது” என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!