#AUSvsIND பயிற்சியில் உடல் முழுக்க பயங்கரமா அடிவாங்கினார் ரஹானே.. ஆனாலும் விடலயே..!

First Published Jan 4, 2021, 10:59 PM IST

ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு ரஹானே பேட்டிங் பயிற்சி செய்து தயாரான விதம் குறித்து அவரது பேட்டிங் ஆலோசகரும் பயிற்சியாளருமான பிரவீன் ஆம்ரே புகழ்ந்து பேசியுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும், 2வது டெஸ்ட்டில் கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே ரஹானே தலைமையிலான இந்திய அணியும் வெற்றி பெற்றன. அந்த போட்டியில் கேப்டன் ரஹானே பொறுப்புடன் பேட்டிங் ஆடி சதமடித்தார். முதல் இன்னிங்ஸில் அவர் அடித்த சதம் தான் இந்திய அணி நல்ல ஸ்கோரை அடித்து, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற உதவியது. அந்த சதம் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவின் 12வது சதம்.
undefined
அந்த போட்டிக்கு ரஹானே தயாரான விதம் குறித்து அவரது பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய பிரவீன் ஆம்ரே, ரஹானே அவராகவே தனியாக பயிற்சி செய்தார். த்ரோ பண்ணும் நபரை வைத்து அவருக்கு எந்தெந்த ஏரியாக்களில் பந்துவீச வேண்டுமோ அங்கெல்லாம் வீசவைத்து பயிற்சி செய்தார். பந்தை விரைவில் அடித்து ஆடி பயிற்சி செய்தார். ஆஸ்திரேலியாவில் ஆடுவதற்கு அந்த பயிற்சி மிக முக்கியம். அந்த பயிற்சியின்போது அவரது உடலில் பல இடங்களில் பல முறை அடிவாங்கினார். ஆனாலும் தொடர்ந்து பயிற்சி செய்தார். அவர் பயிற்சி செய்ததை பார்த்தது சிறப்பான உணர்வு என்று பிரவீன் ஆம்ரே தெரிவித்தார்.
undefined
click me!