கங்குலிக்கு ஃபோன் போட்டு நலம் விசாரித்த பிரதமர் மோடி..! எந்த உதவினாலும் செய்ய தயார் என்ற மோடி

First Published Jan 4, 2021, 3:51 PM IST

மாரடைப்பால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, நேற்று முன் தினம் கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதய குழாய் அடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.
undefined
நாராயணா மருத்துவமனையின் மருத்துவர் தேவி ஷெட்டி உட்பட நாடு முழுவதும் உள்ள 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு கங்குலிக்கு சிகிச்சையளித்துவருகிறது.
undefined
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கங்குலியின் உடல்நிலை விசாரித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கங்குலியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உடல்நலம் விசாரித்தார். பின்னர் கங்குலியின் மனைவியிடம் பேசிய பிரதமர் மோடி, என்ன உதவியென்றாலும் செய்ய தயார் என்று தெரிவித்திருக்கிறார்.
undefined
click me!