#AUSvsIND அவரு உண்மையான சாம்பியன்.. இந்திய வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

First Published Jan 3, 2021, 10:13 PM IST

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா சாம்பியன் பவுலர் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி தொடங்குகிறது.
undefined
2வது போட்டியில் இந்திய அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ஷமி ஆகிய இருவரும் இல்லாமலேயே ரஹானே தலைமையிலான இந்திய அணி அபாரமாக ஆடி ஆஸி., அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதற்கு இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் முக்கிய காரணம். இந்திய அணியின் பவுலிங் தற்போது சிறப்பாக உள்ளதால் தான் ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்த முடிகிறது.
undefined
இந்திய பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்துவது, இந்திய அணி அதிகமாக சார்ந்திருப்பது பும்ரா தான். இந்திய அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பிரேக்கை ஏற்படுத்தி கொடுக்கும் முக்கியமான பவுலர் பும்ரா. இந்நிலையில், பும்ராவை சாம்பியன் பவுலர் என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.
undefined
இதுகுறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், ஃபாஸ்ட் பவுலிங் டிபார்ட்மெண்ட்டிற்கு பும்ரா தான் தலைவர். அவர் தான் அதிகமான பொறுப்பை தனது தோள்களில் சுமந்து, இந்திய அணி துவழும்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி கொடுக்கிறார். அதுதான் சாம்பியன் பவுலருக்கான அடையாளம், அறிகுறி என்று சச்சின் டெண்டுல்கர் பும்ராவை புகழ்ந்துள்ளார்.
undefined
முதல் டெஸ்ட்டில் பும்ரா மொத்தமாக 2 விக்கெட் தான் வீழ்த்தினார். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்ற 2வது டெஸ்ட்டில் பும்ரா, முதல் இன்னிங்ஸில் 4, 2வது இன்னிங்ஸில் 2 என மொத்தமாக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
undefined
click me!