இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்துள்ளது.
தொடக்க வீரர் பிரித்வி ஷா டக் அவுட்டான நிலையில், மயன்க் அகர்வால் 17 ரன்களுக்கும் புஜாரா 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த கோலி 74 ரன்களுக்கு ரன் அவுட்டாகி சத வாய்ப்பை இழந்தார். ரஹானே 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹனுமா விஹாரி பதினாறு ரன்களுக்கு நடையை கட்டினார்.
விராட் கோலி சிறப்பாக ஆடிய நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகிய மூவரில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. புஜாரா 43 ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும் கூட, 160 பந்துகளை எதிர்கொண்டார்.
இதன்மூலம் கடந்த பத்தாண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஜனவரி 1, 2011லிருந்து இதுவரை புஜாரா, 3609 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த பத்தாண்டில் அதிக பந்துகளை எதிர்கொண்டிருந்த ஜோ ரூட்டின்(3607 பந்துகள்) சாதனையை முறியடித்துள்ளார் புஜாரா. இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் கோலி(3183 பந்துகள்)