#AUSvsIND என்னை ஏன் டீம்ல எடுத்தீங்க? அந்தளவுக்குலாம் நான் ஒர்த் இல்லனு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிரித்வி

First Published Dec 18, 2020, 6:44 PM IST

பிரித்வி ஷா தனது மோசமான ஃபார்மையும் பேட்டிங்கையும் தொடர்ந்துவருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பிற்கு தனக்குத்தானே ஆப்படித்துக்கொள்கிறார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியான இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு சுருண்டது.
undefined
இதையடுத்து 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் சில ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 2வது பந்திலேயே டக் அவுட்டான பிரித்வி ஷா, 2வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு நடையை கட்டி, தனது மோசமான பேட்டிங்கை தொடர்வதுடன், அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையையும் கெடுத்துக்கொண்டே வருகிறார்.
undefined
ரோஹித் சர்மா முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், மயன்க் அகர்வாலுடன் மற்றொரு தொடக்க வீரருக்கான போட்டியில் கேஎல் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோரும் இருக்கும் நிலையில், அவர்களுக்கெல்லாம் முன், பிரித்வி ஷாவுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. கேஎல் ராகுல் மாதிரியான கிளாஸ் பிளேயர் மற்றும் இளம் திறமைசாலியான கில் ஆகியோரையெல்லாம் மீறி தொடக்க வீரருக்கான வாய்ப்பை பெறும் பிரித்வி ஷா, சொதப்பலான பேட்டிங் மற்றும் மட்டமான ஃபீல்டிங் என தொடர்ச்சியாக சொதப்புவதன் மூலம் தனது வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறார்.
undefined
click me!