#AUSvsIND டெஸ்ட்: புடிச்சாலும் புளியங்கொம்பை புடிச்ச உமேஷ் யாதவ்! ஆஸி.,யை பொட்டளம் கட்டிய இந்திய பவுலர்கள்

First Published Dec 18, 2020, 4:43 PM IST

இந்தியாவுக்கு எதிராக நங்கூரம் போட்டு ஆடிக்கொண்டிருந்த மார்னஸ் லபுஷேனை உமேஷ் யாதவ் வீழ்த்தி பிரேக் கொடுக்க, 191 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் சுருண்டது ஆஸ்திரேலிய அணி.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. பகலிரவு போட்டியாக நடக்கும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கே சுருண்டது.
undefined
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகிய இருவரையும் தலா 8 ரன்களில் பும்ரா வீழ்த்த, அதன்பின்னர் ஸ்மித்தை ஒரு ரன்னிலும் டிராவிஸ் ஹெட்டை 7 ரன்னிலும் கேமரூன் க்ரீனை 11 ரன்னிலும் அஷ்வின் சீரான இடைவெளியில் வீழ்த்தி வெளியேற்றினார். 79 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, லபுஷேனும் கேப்டன் டிம் பெய்னும் நம்பிக்கையளித்தனர்.
undefined
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போட்ட லபுஷேன், பொறுப்பாகவும் தெளிவாகவும் ஆடினார். 119 பந்துகளை எதிர்கொண்ட லபுஷேன், 47 ரன்கள் அடித்திருந்த நிலையில், உமேஷ் யாதவ் தனது முதல் விக்கெட்டாக, லபுஷேனை வீழ்த்தினார். ஆரம்பத்திலிருந்து உமேஷ் யாதவுக்கு விக்கெட்டே விழாமல் இருந்த நிலையில், இந்த இன்னிங்ஸில் தனது முதல் விக்கெட்டாக முக்கியமான வீரரான லபுஷேனை வீழ்த்தினார்.
undefined
அதன்பின்னர் பாட் கம்மின்ஸை டக் அவுட்டாக்கி அனுப்பினார் உமேஷ் யாதவ். பதினைந்து ரன்களுக்கு மிட்செல் ஸ்டார்க் ரன் அவுட்டாக, நேதன் லயனை 10 ரன்களில் அஷ்வின் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த கேப்டன் டிம் பெய்ன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் அடித்திருந்த நிலையில், கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட்டை 8 ரன்களுக்கு உமேஷ் யாதவ் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கே சுருண்டது.
undefined
click me!