
Pakistan Women Team Dropped 7 Catches Against New Zealand Women: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு செல்வதும், செல்லாததும் பாகிஸ்தான் மகளிர் அணி கையில் தான் இருந்தது. ஏனென்றால், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் இந்தியா ஜெயித்திருந்தால் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதிப் போட்டிக்கு சென்றிருக்கும். ஆனால், தோற்றதால் பாகிஸ்தானின் வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்தது. அதெப்படி என்னையவே காலி பண்ண உன்ன எப்படி அரையிறுதிக்கு விடுவேன் என்று பாகிஸ்தான் நினச்சிருக்கும் போல.
அந்தளவிற்கு மட்டமாக நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால், நியூசிலாந்து மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக நியூசிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இதுவரையில் நியூசிலாந்து ஒரு முறை கூட டிராபி ஜெயிக்கவில்லை. ஆஸ்திரேலியா 6 முறை டிராபியை வென்றுள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நேற்று மிகவும் முக்கியமான போட்டியான நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான குரூப் ஏ பிரிவில் கடைசி லீக் போட்டி நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அவர்கள் கொடுத்த லட்டு மாதிரியாக கேட்சுகளை எல்லாம் பாகிஸ்தான் வீராங்கனைகள் கோட்டைவிட்டனர். ஒரே ஓவரில் 3 கேட்சுகள் விட்டனர். அதுவும் ஒருத்தரே விட்டார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். ஹாட்ஸ்டாரில் பார்த்த எனக்கும் சிரிப்பு தான் வந்தது.
அந்தளவிற்கு அவர்களது பீல்டிங் இருந்தது. மொத்தமாக 7 கேட்சுகளை விட்டுருக்காங்க. கேட்ச் விட்ட வீராங்கனைகளில் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். லாங் அன் திசையில் பீல்டிங்கில் நின்றிருந்த அவர் கடைசி ஓவரில் மட்டும் 3 கேட்சுகளை கோட்டைவிட்டார். கடைசியில் ஒரு கேட்ச் பிடித்தார்.
இந்தப் போட்டியில் அவர் மட்டும் 4 கேட்சுகளை பிடித்துள்ளார். நிடா தர் ஓவரில் மட்டும் 5 கேட்சுகள் வந்துள்ளது. இதில் ஒரே ஓவரில் 4 கேட்சுகள் வர, 3 கேட்சுகளை கோட்டைவிட்ட பாக், வீராங்கனைகள் கடைசியாக ஒரு கேட்ச் பிடிக்க நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டும் எடுத்தது.
போட்டியின் 5ஆவது ஓவரை நிடா தர் வீசினார். அந்த ஓவரில் 4.2 ஆவது ஓவரில் சுசீ பேட்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் முனிபா அலி தவறவிட்டார். இதே போன்று ஓமைமா சோஹாலி வீசிய 5.2ஆவது ஓவரில் பேட்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நஷ்ரா சந்து தவறவிட்டார்.
அதன் பிறகு மீண்டும் ஓமைமா சோஹாலி வீசிய 7.3ஆவது ஓவரில் அமெலியா ஹெர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சோஹாலியே கோட்டைவிட்டார். இதே போன்று நிடா தர் வீசிய 15.5ஆவது ஓவரில் ஷோஃபி டிவைன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிட்ரா அமீன் நழுவவிட்டார்.
நஷ்ரா சந்து வீசிய போட்டியின் 17.2 ஆவது ஓவரில் ப்ரோக் ஹலிடே கொடுத்த கேட்ச் வாய்ப்பும் நழுவவிடப்பட்டது. கடைசியாக நடா மிர் வீசிய 20ஆவது ஓவரில் மட்டும் 3 கேட்சுகள் விடப்பட்டது. அதுவும் ஃபாத்திமா சனா தான் 3 கேட்சுகளையும் கோட்டைவிட்டுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்த போட்டியில் 5 கேட்சுகள் பிடித்திருக்கிறார்.
இதன் மூலமாக 3 அல்லது அதற்கு மேல் கேட்ச் பிடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற சாதனையை ஃபாத்திமா சனா படைத்துள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10.4 ஓவர்களில் இலக்கை எட்டினால் பாகிஸ்தான் அரையிறுக்கு முன்னேறும். ஆனால், 10.4 ஓவர்களுக்கு பிறகு வெற்றி பெற்றால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது.
ஆனால், பாகிஸ்தான் மகளிர் அணி 11.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்து மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. வரும் போது மகளிர் இந்திய அணியையும் கையோடு கூட்டி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.