கராச்சி மைதான பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். போட்டியின் தொடக்கத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், அதிக ரன்கள் எடுக்கப்படலாம். பனி காரணமாக டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
போட்டி நேரம்: மதியம் 2.30 (இந்திய நேரம்)
நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
30 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர்
30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் ஐசிசி தொடரை நடத்துகிறது. பாகிஸ்தானில் கடைசியாக ஐசிசி தொடர் நடந்தது 1996ல். இந்தியா, இலங்கையுடன் சேர்ந்து பாகிஸ்தான் ஒருநாள் உலகக் கோப்பையை நடத்தியது.
மைதானத்தில் 12,000 போலீஸ் பாதுகாப்பு
ஐசிசி தொடரை நடத்தும் பாகிஸ்தான், பாதுகாப்பிற்காக 12,000க்கும் அதிகமான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. லாகூர் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 உயர் அதிகாரிகள், 6,700 காவலர்கள் உட்பட 8,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கராச்சி, ராவல்பிண்டி மைதானங்கள், வீரர்கள் தங்கும் ஹோட்டல்கள், அவர்கள் பயணிக்கும் வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.