இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்குக்கு எதிராக ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார்..! என்ன காரணம்?

Published : Sep 28, 2025, 07:15 PM IST

இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்குக்கு எதிராக ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
PCB Complaint on Arshdeep Singh

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்னும் சற்று நேரத்தில் விளையாட உள்ளன. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில், செப்டம்பர் 21 அன்று நடந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 'ஆபாசமான சைகை' காட்டியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்துள்ளது என சமா டிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

24
அர்ஷ்தீப் சிங் மீது பாகிஸ்தான் புகார்

அதாவது சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் 6 விக்கெட் வெற்றிக்குப் பிறகு அர்ஷ்தீப்பின் நடத்தைக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிசிபி கோரியுள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் பார்வையாளர்களை நோக்கி ஒழுக்கமற்ற சைகைகளை காட்டி ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக பாகிஸ்தான் புகாரில் குற்றம் சாட்டியுள்ளது.

கிரிக்கெட்டுக்கு அவப்பெயர்

அர்ஷ்தீப்பின் செயல்கள் கிரிக்கெட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக பிசிபி ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. நடத்தை விதிகளை மீறும் வீரர்களுக்கு எதிரான ஒழுங்குமுறை நடவடிக்கைகளின்படி கடுமையான நடவடிக்கைகளை ஐசிசி விதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வாரியம் வலியுறுத்தியுள்ளது என சமா டிவி தெரிவித்துள்ளது.

34
சூர்யகுமார் யாதவ் மீதும் புகார்

அர்ஷ்தீப் மீதான புகாருக்கு முன்பு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு எதிராகவும் பிசிபி இரண்டு புகார்களை ஐசிசியிடம் அளித்தது. செப்டம்பர் 14 அன்று நடந்த குரூப்-ஸ்டேஜ் போட்டிக்குப் பிறகு, பஹல்காம் சம்பவம் குறித்து சூர்யகுமார் தெரிவித்த கருத்துக்கு பிசிபி எதிர்ப்பு தெரிவித்தது. 

பஹல்காம் கருத்துக்காக சூர்யகுமார் நடத்தை விதிகளை மீறியதாக ஐசிசி கண்டறிந்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ செய்தி வெளியிட்டிருந்தது. சூர்யகுமார் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

44
சூர்யகுமார், ஹாரிஸ் ராஃபுக் அபராதம்

ஆனாலும் ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் அதை நிராகரித்தார். இதனால் சூர்யகுமார் யாதவ்க்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கேவலமான செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ராஃபுக்கு ஐசிசி 30% அபரதாம் விதித்தது. அதே வேளையில் அரை சதம் அடித்ததும் துப்பாக்கி சுடுவது போல் கொண்டாடிய ஃபர்ஹானுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories