இது தொடர்பாக'டெலிகாம் ஏசியா ஸ்போர்ட்' வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 போட்டிக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் ஊழியர் தனது தினசரி பணிக்காக வீரரின் அறைக்குச் சென்றபோது, அவர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமாகக் கத்தியுள்ளார். உடனடியாக ஹோட்டல் பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்து அவரை மீட்டுள்ளனர்.
மன்னிப்பு கேட்ட மேலாளர்
பின்னர், ஹோட்டல் மேலாளர், பாகிஸ்தான் அணி மேலாளர் நவைத் சீமாவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். ஹோட்டல் நிர்வாகம் அந்த வீரருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. ஆனால், இலங்கையில் சட்டச் சிக்கலில் சிக்குவதைத் தவிர்க்க, மேலாளர் நவைத் சீமா வீரர் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், அந்த வீரருக்கு உடனடியாகப் பெரும் தொகையை அபராதமாக விதித்து, இப்போதைக்கு இந்த விவகாரத்தை முடித்து வைத்துள்ளார். ஆனால், இந்தச் சம்பவத்தால் போட்டியின் போது அணியின் சூழல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.