தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குத் தயாராகும் விதமாக, இந்திய அணியின் இளம் வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் ஈடன் கார்டன்ஸில் நடந்த வலைப் பயிற்சியில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள ஒரு பேட் (Pad) மட்டும் அணிந்து பயிற்சி மேற்கொண்டனர். இது அபாயகரமானது மட்டுமின்றி, பழைய பாணி பயிற்சி உத்தி ஆகும்.
சுழற்பந்து வீச்சுகளைச் சமாளிப்பதற்காக, பேட்ஸ்மேன்கள் தற்காப்புக்கு Bat-ஐ அதிகம் பயன்படுத்த வேண்டும், Pad-ஐ சார்ந்து இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் பழைய பாணி பயிற்சி முறை இது.
இடது கை ஆட்டக்காரரான சாய் சுதர்ஷன், தனது வலது (முன்) காலைப் பாதுகாக்கும் Pad-ஐ கழற்றிவிட்டுப் பயிற்சி செய்தார். இது, முன் காலை நன்றாக எடுத்து வைத்து விளையாடத் தூண்டும். Pad அணிந்திருந்தால், வீரர்கள் இயல்பாகவே பந்தைத் தடுக்க Bat-ஐ பயன்படுத்துவதற்குப் பதிலாக, முன் Pad-ஐ பயன்படுத்திப் பந்தைத் தடுப்பார்கள். இது LBW அவுட் ஆக வழிவகுக்கும். முன் Pad-ஐ கழற்றுவது, Bat-ஐ மட்டுமே நம்பி விளையாட வற்புறுத்துகிறது.
மேலும், இடது கை வீரர்கள் பந்தை எதிர்கொள்ளும்போது பின்னால் சென்று ஆடும் Back-foot ஆட்டத்தைக் குறைத்து, கீரிஸை விட்டு வெளியேறி (Step Out) சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்க இந்தப் பயிற்சி உதவுகிறது.