New Zealand vs South Africa 2nd Semi Final : NZ vs SA ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அதிகபட்சமாக 362 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
New Zealand vs South Africa 2nd Semi Final : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபை 2025 இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது, முதல் அரையிறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றது. இதையடுத்து 2ஆவது அரையிறுதிப் போட்டி தற்போது லாகூரில் நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.
28
Rachin Ravindra-Kane Williamson
அதன்படி, வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் வில் யங் 21 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். தேவைப்படும் போது பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினர்.
38
ICC Champions Trophy 2025
இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில் அடுத்தடுத்து சதமும் விளாசினர். ரச்சின் ரவீந்திரா 101 பந்துகளில் 13 பவுண்டரி ஒரு சிக்சர் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தது.
48
Champions Trophy 2025
இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக ஐசிசி ஒருநாள் போட்டிகளில் 5 முறை சதம் அடித்த நியூசி வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்தார். இந்த தொடரில் மட்டும் 2ஆவது முறையாக சதம் விளாசினார். இதற்கு முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான 6ஆவது போட்டியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார்.
58
Kane Williamson, Rachin Ravindra
இவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனும் தன் பங்கிற்கு சதம் விளாசினார். அவர் 94 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக ஐசிசி ஒருநாள் போட்டிகளில் 4 முறை சதம் அடித்த நியூசியின் 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். நியூசிலாந்து 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.
68
New Zealand Cricket Team
கடைசி 10 ஓவர்களில் நியூசிலாந்து 110 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. இதில் முதல் 5 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி 5 ஓவர்களில் 66 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல் 49 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 49 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர். பிரேஸ்வெல் 16 ரன்கள் எடுக்க இறுதியாக 50 ஓவர்களில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்து புதிய சரித்திரம் படைத்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 356/5 (ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து), அந்த சாதனையை இப்போது நியூசிலாந்து முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
78
NZ vs SA 2nd Semi Final in ICC Champions Trophy 2025
தென் ஆப்பிரிக்கா அணியைப் பொறுத்த வரையில் இங்கிடி 3 விக்கெட்டுகள் எடுத்தார். ரபாடா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முல்டர் ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால், சிறப்பாக யார் பந்து வீசியது என்று கேட்டால் அப்படி யாரும் பந்து வீசவில்லை. எல்லோருமே ரன்களை வாரி வழங்கியுள்ளனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 315 ரன்கள்.
88
NZ vs SA 2nd Semi Final
ஆனால், ஒரு அணி சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் 351 ரன்கள். இந்த தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 351 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. லாகூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இரு அணிகளுக்கும் 50-50 வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.