#IPL2021Auction ரூ.15 கோடி-னா எங்க காசுக்கு எவ்வளவுனு கூட தெரியல - நியூசி., ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன்

First Published Feb 20, 2021, 9:57 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் ஆர்சிபி அணியால் ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன், தனது உணர்வை பகிர்ந்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு விலை போனார். நியூசி., ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன் ரூ.15 கோடிக்கும், ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஜெய் ரிச்சர்ட்ஸன் ரூ.14 கோடிக்கும் விலைபோனார்கள்.
undefined
இந்த ஏலத்தில் 2வது அதிகபட்ச விலை ஜாமிசனுக்கு கொடுக்கப்பட்டதுதான். ஆர்சிபி அணி தரமான வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர் தேவை என்ற வகையில், நல்ல உயரமான ஃபாஸ்ட் பவுலரான கைல் ஜாமிசனை ரூ.15 கோடிக்கு எடுத்தது.
undefined
இதுகுறித்த தனது உணர்வை பகிர்ந்துள்ள கைல் ஜாமிசன், நான் நள்ளிரவில் எழுந்து ஃபோனை செக் செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். ஆனால் ஒரு சூழலை தவிர்ப்பதை விட, உட்கார்ந்து, மகிழ்ச்சியுடன் அதை எதிர்கொள்வது நல்லது என்ற வகையில் ஏலத்தை பார்த்தேன். எனக்கு ஷேன் பாண்டிடம் இருந்து மெசேஜ் வந்தது. இது(ஏலம்) எவ்வளவு சிறந்தது என்று அவர் தெரிவித்தார். அந்த சில நிமிடங்கள் ஷேன் பாண்டுடன் இணைந்திருந்தது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. உண்மையாகவே ரூ.15 கோடி என்றால் எங்கள் பண மதிப்பிற்கு எவ்வளவு என்று கூட தெரியவில்லை என்று ஜாமிசன் தெரிவித்தார்.
undefined
click me!