#IPL2021Auction ஐபிஎல் ஏலத்தில் யாருமே எதிர்பார்த்திராத 3 பெரும் அதிர்ச்சிகள்

First Published Feb 20, 2021, 9:28 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்தது. அனைத்து அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான இடங்களுக்கு தகுதியான வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலத்தில் நடந்த 3 அதிர்ச்சிகர நிகழ்வுகளை பார்ப்போம்.
 

முதல் அதிர்ச்சி:தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடி என்ற ஐபிஎல் வரலாற்றில் உச்சபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. கிறிஸ் மோரிஸ் நல்ல ஆல்ரவுண்டர் தான் என்றாலும், இது அவருக்கு அதிகபட்ச தொகை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை மாதிரி ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் அவரை பெருந்தொகை கொடுத்து எடுத்தது. ஆனால் இது அனைத்து தரப்புக்குமே பெரும் அதிர்ச்சிதான்.
undefined
2வது அதிர்ச்சி:டெஸ்ட் வீரரான புஜாராவை ரூ.50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சிஎஸ்கே எடுத்தது. 2014ம் ஆண்டுக்கு பிறகு, டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரரான புஜாராவை எந்த ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுத்ததில்லை. இந்நிலையில் சிஎஸ்கே அணி புஜாராவை ஏலத்தில் எடுத்ததும், மற்ற அனைத்து அணிகளும் கைதட்டி வரவேற்பளித்தனர். புஜாராவிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. அவரை கௌரவப்படுத்தும் ஒரே நோக்கில் தான் சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
undefined
3வது அதிர்ச்சி:ரூ.12.5 கோடி என்ற ஒப்பந்தத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவந்த, கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கழட்டிவிட, சமகாலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்மித்தை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. ரூ.2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட ஸ்மித்தை வெறும் ரூ.2.2 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
undefined
click me!