#IPL2021Auction அசிங்கப்படுத்திட்டாங்க.. ஐபிஎல்லில் இருந்து விலகும் ஸ்டீவ் ஸ்மித்..?

First Published Feb 20, 2021, 5:30 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் வெறும் ரூ.2.2 கோடிக்கு மட்டுமே விலைபோனார். அவரை ரூ.2.2 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், அந்த தொகைக்காக அவர் ஐபிஎல்லில் ஆடமாட்டார் என்று சர்ச்சை கருத்துகளுக்கு பெயர்போன ஆஸி., முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு விலை போனார். நியூசி., ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன் ரூ.15 கோடிக்கும், ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஜெய் ரிச்சர்ட்ஸன் ரூ.14 கோடிக்கும் விலைபோனார்கள்.
undefined
பேட்ஸ்மேன்களை பொறுத்தமட்டில் ஆஸி.,யின் அதிரடி ஆல்ரவுண்டரும் ஃபினிஷருமான மேக்ஸ்வெல் ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்டார். அதிரடி வீரர்களான ஜேசன் ராய், ஆரோன் ஃபின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், மார்டின் கப்டில் மற்றும் காலின் முன்ரோ ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
undefined
சமகாலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித்தை அந்த அணி கழட்டிவிட்டதையடுத்து, இந்த ஏலத்தில் அவரை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டாததால், வெறும் ரூ.2.2 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி வாங்கியது.
undefined
இந்நிலையில், ஸ்மித் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்ச்சை கருத்துகளுக்கு சொந்தக்காரரும் ஆஸி., முன்னாள் கேப்டனுமான மைக்கேல் கிளார்க், டி20 கிரிக்கெட்டில் ஸ்மித்தின் பேட்டிங் சரியாக இல்லை. கடந்த ஐபிஎல் சீசன் ஸ்மித்திற்கு சரியாக அமையவில்லை. ஆனாலும் அவர் வெறும் $400,000க்கு ஏலம் போனது பெரும் வியப்பாக இருந்தது. இது நல்ல தொகை தான் என்றாலும் ஸ்மித்துக்கு குறைவுதான்.
undefined
ஐபிஎல் தொடர் 8 வாரங்கள் நடக்கும்; குவாரண்டின் எல்லாம் சேர்த்து மொத்தம் 11 வாரங்கள் ஸ்மித் இந்தியாவில் இருக்க வேண்டிவரும். $380,000 என்ற தொகைக்காக 11 வாரங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க ஸ்மித் விரும்பமாட்டார் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
undefined
click me!