யோவ் கேன் வில்லியம்சன் நீயெல்லாம் மனுஷனே இல்ல ரொம்ப பெரிய மனுஷன். என்ன மனசு.. என்ன பண்பு..நல்லா இருயா.!

First Published Dec 4, 2020, 11:29 AM IST

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். பேட்டிங் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் , ஏனெனில் அவர் களத்தில் பேட்டிங் மூலம் மட்டுமல்லாமல், அவரது தன்மை மற்றும் ஆளுமை காரணமாகவும் எல்லா நாட்டு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த வீரர்  ஆவார் 

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச்சின் தந்தை ஆண்ட்ரூ ஸ்மித்தின் மரணத்திற்குப் பிறகு கேன் வில்லியம்சன் தனது மில்லியன் கணக்கான ரசிகர்கள் அவரை நேசிக்க மற்றொரு காரணத்தை அளித்துள்ளார். ரோச் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நியூசிலாந்தில் உள்ளார்
undefined
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்கள் திட்டமிடப்பட்ட நிலையில் டி20 தொடரை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகள் இன்று ஹாமில்டனில் துவங்கியுள்ளன.
undefined
போட்டி துவங்குவதற்கு முன்னதாக சமீபத்தில் தனது தந்தை ஆன்ட்ரூ ஸ்மித்தை இழந்துள்ள மேற்கிந்திய தீவுகள் வீரர் கெமர் ரோச்சை கட்டித்தழுவி நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது
undefined
மேலும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நியூசிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருதரப்பு வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு நிற பேண்ட்களை அணிந்திருந்தனர்
undefined
பின்னர் நடந்த போட்டியில், நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதத்தை 86 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் ரோச் தனது தந்தைக்கு மற்றொரு அஞ்சலி செலுத்தினார். லாதத்தை வீழ்த்திய பின்னர் அவர் முழங்காலில் முட்டி போட்டு வானத்தை பார்த்தார் , தனது மறைந்த தந்தையை நினைவில் வைத்துக் கொள்ள
undefined
click me!