"வி ஆர் இம்ப்ரெஸ்ட் நட்டி பி ரெடி " நடராஜனின் பயிற்சியை பார்த்து வாய்பிளந்து வியந்து பாராட்டிய கோலி ,சாஸ்திரி.

First Published Nov 17, 2020, 11:12 AM IST

ஐபிஎல் தொடரில் தன் யார்க்கர் பந்துவீச்சால் அனைவரையும் மிரள வைத்தார். அவர் பந்துகளை சந்திக்க சர்வதேச வீரர்களே திணறினர். இந்த நிலையில், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது

பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு அவருக்கு முதலில் அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்க உள்ள மூன்று இந்திய அணிகளில் எதிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மாறாக அணியில் கூடுதல் பந்துவீச்சாளராக பயிற்சியின் போது மட்டும் பந்துவீசும் வாய்ப்பை பெற்றார்
undefined
அதன் பின் டி20 அணியில் இடம் பெற்று இருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்ட பின் டி நடராஜன் டி20 அணியில் சேர்க்கப்பட்டார். அதன் மூலம், போட்டிகளில் கூட அவர் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முடிவு செய்தால் மட்டுமே அது நடக்கும்
undefined
நடராஜனையும் சேர்த்து ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஆட உள்ள இந்திய அணியில் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பும்ரா, ஷமி, சைனி, தீபக் சாஹர், நடராஜன் என ஐந்து பேர் உள்ளனர் இவர்களில் மூவருக்கு மட்டுமே ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கும்
undefined
அனுபவ வீரர்களை தாண்டி நடராஜன் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவது கடினம் என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் தான் நடராஜன் இந்திய வீரர்களுடன் வலைப் பயிற்சி செய்யும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன் அவர் பந்து வீசினார்.
undefined
பயிற்சியில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நடராஜனின் பந்துவீச்சை உற்று நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், டி20 போட்டிகளில் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளித்து, நடராஜன் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது
undefined
click me!