Romario Shepherd, MI,
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி தற்போது வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
MI vs DC, IPL 2024
இதில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து இஷான் கிஷான் 42 ரன்களில் நடையை கட்டினார். திலக் வர்மா 6 ரன்களில் வெளியேற ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இணைந்து அதிரடி காட்டினர். இதில், ஹர்திக் பாண்டியா 39 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியில் ரொமாரியா ஷெப்பர்ட் களமிறங்கினார்.
Ishan Kishan, Mumbai Indians
டிம் டேவிட் 21 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, கடைசி ஓவர் முழுவதையும் ரொமாரியா ஷெப்பர்ட் எதிர்கொண்டார். கடைசி ஓவரை ஆன்ட்ரிச் நோர்ட்ஜே வீசினார். இந்த ஓவரில் மட்டும் 4, 6, 6, 6, 4, 6 என்று வரிசையாக 32 ரன்கள் எடுத்தார்.
Romario Shepherd
இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் 234 ரன்கள் குவித்தது. 19 ஓவர்கள் முடிவில் மும்பை 200 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரில் 34 ரன்கள் எடுத்ததன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது. ஷெப்பர்ட் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Mumbai Indians 234 Runs
முதல் 10 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்திருந்தது. 15 ஓவர்களில் 138/4 என்று இருந்த மும்பையின் ஸ்கோர் அடுத்த 5 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்துள்ளது.
MI vs DC, IPL 2024
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபிஎல் அதிகபட்ச ஸ்கோர்:
246/5 vs SRH, ஹைதராபாத், 2024
235/9 vs SRH, அபுதாபி, 2021
234/5 vs DC, வான்கடே, இன்றைய போட்டி*
223/6 vs PBKS, வான்கடே, 2017
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணிகள்:
29 - CSK
24 - RCB
24 - MI*
22 - PBKS
21 – KKR
Mumbai Indians vs Delhi Capitals
ஒரு அணிக்கு எதிராக அதிக முறை 200+ ரன்கள் எடுத்த அணிகள்
6 - RCB vs PBKS
6 - MI vs DC* (இன்றைய போட்டி)
கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:
112 - RCB vs GL, பெங்களூரு, 2016
96 - MI vs PBKS, வான்கடே, 2023
96 - MI vs Dc, வான்கடே, 2024*
91 - KKR vs RCB, ஈடன் கார்டன், 2019