சூர்யகுமார் யாதவ்
ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்தது. 2 அணிகளுமே இந்த சீசனில் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சூர்யகுமார் யாதவ்
வார்னர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக அடித்து ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல், 25 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 54 ரன்களை விளாசினார். வார்னர் 47 பந்தில் 51 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 172 ரன்கள் அடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
சூர்யகுமார் யாதவ்
போட்டியின் 17ஆவது ஓவரை ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் வீசினார். அப்போது அக்ஷர் படேல் பேட்டிங் ஆடிக் கொண்டிந்தார். 3ஆவது பந்தில் சிக்ஸர் அடித்த படேல் 4ஆவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால், பந்து சூர்யகுமார் கைக்கு சென்றது.
சூர்யகுமார் யாதவ்
சரி, பிடித்துவிடுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்பட மும்பை வீரர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, முகத்துக்கு நேராக வைத்து கேட்ச் பிடிக்கிறேன் என்ற பெயரில் பந்தைவிட, பந்து அவரது கண்ணுக்கு நேராக புருவத்தில் பதம் பார்த்தது.
சூர்யகுமார் யாதவ்
இதனால், வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவருக்கு புருவத்தில் லேசான வீக்கம் தென்பட்டது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் டைவ் அடித்து கேட்ச் பிடித்த சூர்யகுமாருக்கு இப்போது கையில் வந்து விழுந்த கேட்சை கூட பிடிக்கமுடியவில்லை
சூர்யகுமார் யாதவ்
இதனால், அவருக்கு நேரம் சரியில்லை என்று ரசிகர்கள் உள்பட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதன் பிறகு மும்பை அணி பேட்டிங் ஆட வந்த போது, இஷான் கிஷான், திலக் வர்மா ஆகியோர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். ஆனால், அவர் வந்த வேகத்தில் முகேஷ் குமார் ஓவரில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவிற்கு கட்டம் சரியில்லை!
சூர்யகுமார் யாதவ்
இதன் மூலமாக தொடர்ச்சியாக அவர் கோல்டன் டக் முறையில் வெளியேறி வருகிறார். இதற்கு முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ஹாட்ரிக் முறையில் கோல்டன் டக் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக அவர் 15, 1, 0 என்று ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த சூர்யகுமார் யாதவ்