ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதற்கு முன் ஆடிய போட்டிகள் அனைத்திலும் தோற்ற டெல்லி கேபிடள்ஸ் (3) மற்றும் மும்பை இந்தியன்ஸ்(2) அணிகள் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே முதல் வெற்றியை எதிர்நோக்கி ஆடிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
24
முதலில் பேட்டிங் ஆடிவரும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், 7 ரன்கள் அடித்தபோது ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக 3000 ரன்களை எட்டினார். இதன்மூலம் கேப்டனாக அதிவேகமாக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் வார்னர்.
34
இதற்கு முன் ஐபிஎல்லில் கேப்டனாக 81 போட்டிகளில் 3000 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில், 73 போட்டிகளில் 3000 ரன்கலை அடித்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். டெல்லி கேபிடள்ஸுக்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணியை கேப்டன்சி செய்துள்ளார் வார்னர்.
44
ஐபிஎல்லில் 6000 ரன்களை 165 இன்னிங்ஸ்களில் அடித்து விரைவாக 6000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்திருந்த வார்னர், கேப்டனாக வேகமாக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.