சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 200ஆவது போட்டி
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அன்று நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 200ஆவது போட்டி
எனினும், இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. அதன் பிறகு நடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 200ஆவது போட்டி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக சென்னையில் லக்னோவிற்கு எதிரான போட்டியில் ரசிகர்கலுக்கு வாண வேடிக்கை காட்டப்பட்டது. அதே போன்று இன்று நடக்கும் போட்டி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 200ஆவது போட்டி
அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இதுவரையில் 199 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 200ஆவது போட்டியில் களமிறங்குகிறார்.
சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 200ஆவது போட்டி
சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200ஆவது போட்டி, அதுவும் சென்னையில் நடக்கும் போட்டி என்றால் சொல்லவா வேண்டும். சிஎஸ்கே போட்டியை காண்பதற்கே ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். அதிலேயும் தோனியின் 200 போட்டி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தாலே புல்லரிக்கும் வகையில் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் தோனி 237 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
எம்எஸ் தோனி கேப்டன் 200
கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய நிலையில் அந்த அணிக்கு ஐபிஎல் தொடரில் தடை விதிக்கப்பட்டது. அதாற்குப் பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி களமிறக்கப்பட்டது. இந்த அணிக்கு தோனி கேப்டனாக இருந்தார்.
எம்எஸ் தோனி 200
2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்றார். ஆனால், அந்த அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், அவருக்குப் பதிலாக மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார்.
எம்எஸ் தோனி
எனினும், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டில் சென்னை அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கேயின் கேப்டனாக இது தோனியின் 200ஆவது போட்டி என்பதால், அவருக்கு கண்டிப்பாக பரிசு காத்துக் கொண்டிருக்கிறது என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.