IND vs AUS 4th T20: கல்யாணத்திற்கு ஒரு நாள் மட்டுமே லீவு எடுத்து, மீண்டும் அணிக்கு திரும்பிய முகேஷ் குமார்!

Published : Dec 01, 2023, 07:49 PM IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் கடந்த 29 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்று நடக்கும் 4ஆவது டி20 போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார்.

PREV
17
IND vs AUS 4th T20: கல்யாணத்திற்கு ஒரு நாள் மட்டுமே லீவு எடுத்து, மீண்டும் அணிக்கு திரும்பிய முகேஷ் குமார்!
Mukesh Kumar

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். கடந்த 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்தார். தந்தை டாக்ஸி பிஸினஸ் காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு குடியேறினார்.

27
Mukesh Kumar

முதல் முறையாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் விளையாடினார். ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி டிராபி தொடர்களில் விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் பீகார் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் 2024 தொடருக்காக டெல்லி அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

37
Mukesh kumar and Divya Singh Marriage

கடந்த 20 ஜூலை 2023ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதே மாதம் 27ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

47
India vs Australia 4th T20

ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய முகேஷ் குமார் 2 விக்கெட்டும், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளும், 4 டி20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

57
IND vs AUS 4th T20

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் விக்கெட் கைப்பற்றாத முகேஷ் குமார், 2ஆவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

67
MukshKumar Divya Singh

கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமாருக்கும், நெருங்கிய உறவுக்கான பெண்ணும், காதலியுமான திவ்யா சிங்கிற்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து 8 மாதங்களுக்குப் பிறகு 29ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

77
Mukesh Kumar Wedding

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. திருமணம் காரணமாக கவுகாத்தியில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முகேஷ் குமார் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஆவேஷ் கான் இடம் பெற்றார். இதையடுத்து டிசம்பர் 1 ஆம் தேதி ராய்பூரில் நடக்கும் 4ஆவது டி20 போட்டியில் முகேஷ் குமார் இடம் பெறுவார் என்று பிசிசிஐ அறிவித்தது. அதன்படி இன்றைய போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories