டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் – ஆகாஷ் சோப்ரா!

First Published | Dec 1, 2023, 5:22 PM IST

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rohit Sharma T20 Captain

இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

Rohit Sharma

லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டியிலும் வெற்றி பெற்றதோடு, அரையிறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்த இந்திய அணியானது, கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.


Indian Team T20 Captain

இந்த உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டன் யார் என்பது குறித்து வதந்திகள் பரவி வருகிறது.

Rohit Sharma

கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்டிக் பாண்டியா தான் டி20 போடிகளில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Rohit Sharma

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில், நடந்து முடிந்த 3 போட்டிகளின் படி இந்திய அணியானது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

T20 World Cup Captain

இதையடுத்து 4ஆவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

2024 T20 World Cup Captain

இதில், டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா, ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் மற்றும் டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Rohit Sharma T20 World Cup Captain

மேலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒயிட்பால் கிரிக்கெட் தொடர்களில் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பைக்கு யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது.

Rohit Sharma

இது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரான ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பதாவது: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.

Team India T20 Captain

உண்மையில், 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலியும் இடம் பெறுவார். அதில் அவர் 3வது இடத்தில் பேட்டிங் செய்வார். ஐபிஎல் 2024ல் இருந்தும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்று தான் கருதுவதாகவும் கூறினார்.

Rohit Sharma

2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா சுதந்திரமாக விளையாடினால் அவர் தான் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!