MS Dhoni: BAS பேட் தயாரிப்பாளர்கள் தனக்கு செய்த உதவிக்காக பல கோடி ரூபாய் ஒப்பந்தத்தை மறுத்த தோனி!

First Published | Aug 25, 2024, 7:17 AM IST

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனியின் பங்கேற்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவர் தனது பேட்டில் பிரைம் ஸ்போர்ட்ஸ் லோகோவை இலவசமாகப் பயன்படுத்தி நண்பருக்கு உதவியுள்ளார். 2019 உலகக் கோப்பையின் போது BAS நிறுவனத்திற்காகவும் இதேபோல் கோடிகளை இழந்து உதவியுள்ளார்.

MS Dhoni BAS Bat

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் முடிந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன. இதில், எத்தனை பிளேயர்ஸ் தக்க வைக்கப்படுவார்கள், எத்தனை வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும் இது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

MS Dhoni BAT

எப்படியும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பெரிய மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர் வீரர்கள் பலரும் அணி மாறுவதற்கான ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Tap to resize

MS Dhoni Bat

MS Dhoni Batஆனால், அதைப் பற்றி எதுவும் தோனி தெரிவிக்கவில்லை. ஆனால், ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக அதிரடியாக சிஎஸ்கே அணியின் கேப்டன் மாற்றப்பட்டார். தோனிக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

MS Dhoni

இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழிகாட்டியாக எம்.எஸ்.தோனி செயல்பட்டார். மைதானத்தில் பீல்டிங் செட் செய்வது முதல் ஓவர் கொடுப்பது வரை அனைத்து பொறுப்புகளையும் தோனி மேற்கொண்டார் என்று கூட சொல்லலாம். வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம். அல்லது 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் கூட அவர் விளையாடலாம்.

BAT Manufacturing Company - BAS

இது ஒருபுறம் இருக்க, தோனி தனது பேட்டில் பிரைம் ஸ்போர்ட்ஸ் லோகோ கொண்ட ஸ்டிக்கரை ஒட்டி ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளார். இது நண்பருக்காக தோனி செய்யும் சிறிய உதவியாக சொல்லப்பட்டது. இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக, பேட் உற்பத்தி நிறுவனமான BASன் உரிமையாளரான சோமி கோலிக்கு தோனி உதவி செய்துள்ளார்.

MS Dhoni

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது இது போன்று ஒன்றை தனக்கு செய்ததாக சோமி கோலி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தோனி, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை கைவிட்டு அதற்குப் பதிலாக 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது தங்களது BAS லோகோவை பேட்டில் பயன்படுத்தி விளையாடினார்.

MS Dhoni

மேலும், தோனி கிரிக்கெட் விளையாடிய ஆரம்ப காலகட்டத்தில் பேட் தயாரிப்பாளரிடமிருந்து பெற்ற உதவிக்காக இதைச் செய்ததாக கூறினார். BAS லோகோவை தனது பேட்டில் பயன்படுத்துவதற்காக ஒரு பைசா கூட வசூலிக்கவில்லை. அதோடு எந்தப் பணத்தையும் அவர் குறிப்பிடவில்லை. உங்களது BAS லோகோ கொண்ட ஸ்டிக்கரை பேட்களில் ஒட்டி அனுப்புங்கள் என்று மட்டுமே கூறினார்.

MS Dhoni

நான் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தேன். அப்படி அவர் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு இருந்தால் அவருக்கு பல கோடி ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அவரது மனைவி சாக்‌ஷி, அவரது தாயார் மற்றும் ராஞ்சியில் உள்ள பரம்ஜித் ஆகியோரிடம் நான் கேட்டேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இது என்னுடைய முடிவு என்று கூறியதாக சொன்னார்கள் என்றார்.

MS Dhoni List Of Bats

BAS உடனான தோனியின் தொடர்பு கடந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கியது. அதுவும், தோனியின் நண்பரான பரம்ஜித் சிங் ராஞ்சியைச் சேர்ந்த தோனிக்கு ஆதரவாக கோலியை சமாதானப்படுத்தினார். இதன் காரணமாக தோனி BAS பேட்டை பயன்படுத்த தொடங்கினார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் தோனி தனது முதல் சர்வதேச சதத்தை BAS என்ற லோகோ கொண்ட பேட் உடன் விளையாடி இந்த மகத்தான சாதனையை பாகிஸ்தானுக்கு எதிராக படைத்தார். இந்தப் போட்டியில் அவர் 148 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!