சின்ன தல சாதனையை முறியடித்த தல; சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரரான தோனி!

MS Dhoni Breaks Suresh Raina's Most runs for CSK in IPL : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

MS Dhoni Breaks Suresh Raina's Most runs for CSK in IPL in Tamil rsk

MS Dhoni Breaks Suresh Raina's Most runs for CSK in IPL : இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார். சென்னையின் கோட்டை என்று சொல்லப்படும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 8ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

MS Dhoni Breaks Suresh Raina's Most runs for CSK in IPL in Tamil rsk
IPL 2025, CSK vs RCB IPL 2025, IPL 2025 CSK vs RCB

இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியைப் பொறுத்த வரையில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மதீஷா பதிரனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.


Most runs for CSK in the IPL, Top 5 Run Scorer for CSK In IPL

பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதில், ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். திரிபாதி 5, கெய்க்வாட் 0, ஹூடா 4, சாம் கரண் 8 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இம்பேக்ட் பிளேயராக வந்த ஷிவம் துபே 19 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 11 எடுக்க கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த எம்.எஸ்.தோனி 30 ரன்கள் எடுத்தனர்.

CSK vs RCB, Royal Challengers Bengaluru

இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து தோனி இந்த சாதனையை நிகழ்த்தினார். 43 வயதான தோனி, இதுவரை 204 இன்னிங்ஸ்களில் 4699 ரன்கள் எடுத்துள்ளார். சுரேஷ் ரெய்னா 171 இன்னிங்ஸ்களில் 4687 ரன்கள் எடுத்திருந்தார். இந்த பட்டியலில் ஃபாஃப் டு பிளெஸ்ஸி (2721 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (2433* ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (1939 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

MS Dhoni, Suresh Raina, CSK, Chennai Super Kings

கெய்க்வாட் மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது சென்னை அணியில் விளையாடி வருகின்றனர். டு பிளெஸ்ஸி டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் துணை கேப்டனாக உள்ளார். சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான அணிக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டியில், ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2008 க்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வென்றது இதுவே முதல் முறையாகும். ஆட்டநாயகன் விருது படிதாருக்கு வழங்கப்பட்டது.

Latest Videos

vuukle one pixel image
click me!