சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் (195) செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி வைத்துள்ளார். தனது 44 வயதிலும் ஐபிஎல்லில் மின்னல் வேகத்தில் அவர் ஸ்டெம்பிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடைசி ஓவர்களில் ஆட்டத்தை வென்று கொடுக்கும் பினிஷிங் ரோலை தோனி மாதிரி இதுவரை எந்த வீரரும் செய்யவில்லை. மேலும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் 183 ரன்கள் குவித்து, ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
ரயில்வே டிக்கெட் பரிசோதகர் தோனி
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன. கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்பு தோனி இந்திய ரயில்வேயில் வேலை பார்த்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? தோனி கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். அங்கு இருந்து தான் அவரது வாழ்க்கை மாறி உச்சத்துக்கு கொண்டு சென்றது.