இந்திய வீரர் முகமது சிராஜ் ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி விருதை வென்று அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்ட்டில் வெறித்தமனமாக பவுலிங் போட்டு இந்திய அணி தொடரை சமன் செய்ய சிராஜ் முக்கிய காரணமாக இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதற்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஐசிசி விருது வழங்கியுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஓவல் டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் மறக்கமுடியாத வெற்றிக்கு சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.
24
ஐசிசி விருது வென்ற முகமது சிராஜ்
இங்கிலாந்தை ஆறு ரன்களில் வீழ்த்தி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்து இந்தியா அசத்தியது. இந்த போட்டியில் மொத்தம் 46 ஓவர்கள் வீசிய சிராஜ் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஐசிசின் ஆகஸ்ட் மாத விருதுக்கு நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் சிராஜுடன் போட்டி போட்டனர்.
34
விருது வென்ற சிராஜ் மகிழ்ச்சி
ஆனால் இவர்கள் அனைவரையும் தோற்கடித்து சிராஜ் விருதை வென்றார். ஐசிசி விருதால் சிராஜ் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ''ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது தனது வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான தொடர். அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடிந்ததில் பெருமிதம் அடைகிறேன். குறிப்பாக கடைசி டெஸ்டில் எனது பங்களிப்பில் மகிழ்ச்சி கொண்டேன்'' என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் சக வீரர்களின் தொடர்ச்சியான ஊக்கம் தான் இந்த சாதனையை எட்ட உதவியது என்றும் சிராஜ் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்டுகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகளுடன் தொடரின் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஒருவராக இருந்தார்.
இரண்டு முறை ஐந்து விக்கெட் சாதனையையும் சிராஜ் படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஓவல் டெஸ்டில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்தியா 2-2 என சமன் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.