RCB, IPL, IPL 2025,
ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சாதாரண வீரராக விளையாடிய ரோகித் சர்மா, ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2025ல் புதிய அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது. 18ஆவது ஐபிஎல் சீசனுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக தொடங்கப்பட்டுsssssssssள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ரூ.120 கோடி வரையில் செலவு செய்யலாம் என்றும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Virat Kohli and Rohit Sharma, RCB, IPL 2025
அதன்படி ஒவ்வொரு அணியும் யாரையெல்லாம் காப்பாற்றலாம் என்று தீவிரமான யோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது, ரோகித் சர்மாவை வாங்குவதற்கான பிளானை கொண்டு வர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். ஏனென்றால் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிப்பது சந்தேகம் தான். ஆதலால் அவரை வாங்க ஆர்சிபி முன் வர வேண்டும். மேலும், ரோகித் சர்மா தான் ஆர்சிபியை வழநடத்த வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
Royal Challengers Bengaluru, Rohit Sharma
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை கொடுத்த சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா போற்றப்படுகிறது. இதுவரையில் நடைபெற்ற 17 சீசன்களில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிராபி வென்று கொடுத்துள்ளார். மேலும், 2ஆவது சீசனில் டிராபி வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் ரோகித் சர்மா இடம் பெற்றிருக்கிறார். தற்போது வரையில் ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டன் தேவை. ஆதலால், ஆர்சிபி அவரை வாங்க வேண்டும்.
Mumbai Indians, Rohit Sharma
இந்த ஒரு முறை ஆர்சிபி மட்டும் ரோகித் சர்மாவை எடுத்துவிட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். டிராபியும் ஜெயிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். முகமது கைஃப் மட்டுமின்றி ரசிகர்களும் ரோகித் சர்மா ஆர்சிபிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர். என்னதான் கடந்த ஐபிஎல் ஏலத்தில் வலிமையான வீரர்களை ஆர்சிபி எடுத்தாலும் கடைசி வரை போராடி எலிமினேட்டர் வரையில் வந்து தோல்வியோடு வெளியேறியது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக இருந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோகித் சர்மா மட்டும் ஆர்சிபிக்கு வந்துவிட்டால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் காம்போவில் ஆர்சிபி அதிக ரன்களை குவிக்கும். ரோகித் சர்மா ஆர்சிபிக்காக விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
Virat Kohli and Rohit Sharma, IPL 2025
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் விளையாடிய 252 போட்டிகளில் 55 அரைசதங்கள், 8 சதங்கள் உள்பட மொத்தமாக 8004 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று ரோகித் சர்மா 257 போட்டிகளில் விளையாடி 43 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட மொத்தமாக 6628 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ரூ.15 கோடிக்கு விராட் கோலி விளையாடி வரும் நிலையில் ரோகித் சர்மா ரூ.16 கோடிக்கு விளையாடி வருகிறார்.
ஒரு கேப்டனாக ரோகித் சர்மா விளையாடிய 158 போட்டிகளில் 87 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். அதோடு 67 போட்டிகளில் தோல்வி அடைந்ததோடு, 4 போட்டிகளை டிராவும் செய்துள்ளார். வெற்றி சதவிகிதம் 55.06 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.