எனினும், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டில் சென்னை அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கேயின் கேப்டனாக இது தோனியின் 200ஆவது போட்டி என்பதால், அவருக்கு கண்டிப்பாக பரிசு காத்துக் கொண்டிருக்கிறது என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.