தோனி கிரிக்கெட் வாழ்க்கையில எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார்னு அந்த நொடில புரிஞ்சுக்கிட்டேன் அகர்வாலிடம் கலங்கிய கோலி

First Published Nov 11, 2020, 9:44 AM IST

பேட்டிங் மட்டுமல்லாது இவரது பீல்டிங், ஆக்ரோஷமான கேப்டன்சி என அனைத்திலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கோலி சில சமயங்களில் மித வேகப்பந்து வீச்சும் செய்வார். இந்த சூழலில்  இந்திய அணிக்காக கோலி விக்கெட் கீப்பிங் செய்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வந்தது

இது குறித்து அண்மையில் இந்திய அணியின் வீரரான மாயங்க் அகர்வால் உடன் ஆன்லைன் வீடியோ சேட் மூலமாக கோலி உரையாடியபோது அது குறித்த சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் தான் விக்கெட் கீப்பிங் செய்ய என்ன காரணம் என்று பேசிய கோலி கூறுகையில்
undefined
2015ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி கீப்பிங் செய்து வந்தார். திடீரென ஒரு ஆட்டத்தின் 44 ஆவது ஓவரில் என்னை கீப்பிங் பணியை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு டிரெஸ்ஸிங் ரூம்க்கு அவர் சென்று விட்டார். அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அவரின் ஒவ்வொரு பந்தும் மிகவேகமாக வந்து கொண்டிருந்தது
undefined
ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி பந்து வரும் போது பந்து முகத்தில் பட்டு விடுமோ என்ற சந்தேகமும் பயமும் இருந்தது. அதனால் ஹெல்மெட் அணிந்தபடி கீப்பிங் செய்ய முடிவு செய்தேன். ஆனால் மைதானத்தில் இருந்த அதிகப்படியான புழுக்கத்தினால் ஹெல்மெட் அணியவில்லை
undefined
அப்போதுதான் எனக்குப் புரிந்தது கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என இரண்டு வேலையும் செய்யும் பொழுது ஒவ்வொரு பந்தையும் போக்கஸ் செய்துகொண்டே பீல்டிங் செட் செய்வது, கேப்டன்சி செய்வது எவ்வளவு சிரமம் என்று கோலி கூறினார்.
undefined
நான் அந்த ஒரு ஓவரை இந்தியாவுக்காக கீப்பிங் செய்ய தோனி தான் காரணம் என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதவிர சில போட்டிகளில் கோலி சில ஓவர்கள் கீப்பிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
undefined
click me!