ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் இவங்கதான்..! உறுதி செய்த ஜெயவர்தனே

First Published Sep 18, 2020, 8:44 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் கடந்த சீசனில் தொடக்க வீரர்களாக இறங்கிய நிலையில், இந்த சீசனில் அதிரடி டாப் ஆர்டர் வீரரான கிறிஸ் லின்னை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததால், யார் யார் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில், அதை தெளிவுபடுத்தியுள்ளார் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே.
 

ஐபிஎல் 13வது சீசன் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக கோலோச்சும் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.
undefined
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, பும்ரா, க்ருணல் பாண்டியா என கோர் டீம் மிக வலுவாக உள்ளதால் தான் அந்த அணி 4 முறை கோப்பையை வென்றது. மேலும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகிய திறமையான இளம் வீரர்களும் உள்ளனர்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங், ஆல்ரவுண்டர்கள் ஆகிய அனைத்து விதத்திலும் எப்போதுமே சிறந்த அணி காம்பினேஷனையே பெற்றிருந்திருக்கிறது. இந்த சீசனிலும் வலுவான அணியாகவே உள்ளது. கிறிஸ் லின், டிரெண்ட் போல்ட் போன்ற சிறந்த வீரர்களை இந்த சீசனில் ஏலத்தில் எடுத்தது.
undefined
கடந்த சீசனில் ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் தொடக்க வீரர்களாக இறங்கினர். இந்த சீசனில் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கிறிஸ் லின்னை(கேகேஆர் அணியின் தொடக்க வீரராக கடந்த சீசன் வரை ஆடியவரை அந்த அணி கழட்டிவிட்டது) அவரது அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது. எனவே ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக், கிறிஸ் லின் ஆகியோர் இருப்பதால் யார் யார் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பது பெரும் கேள்வியாக இருந்தது.
undefined
நாளை நடக்கவுள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதவுள்ள நிலையில், ரசிகர்களின் இந்த சந்தேகத்தை தீர்த்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே.
undefined
இதுகுறித்து பேசிய ஜெயவர்தனே, கிறிஸ் லின் அருமையான வீரர். அவரை அணியில் பெற்றது மகிழ்ச்சி. ஆனால் ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் கடந்த சீசனில் அருமையாக ஆடினர். இருவரும் அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள். எனவே அந்த ஜோடியை பிரிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் ரோஹித்தும் டி காக்குமே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்று ஜெயவர்தனே கூறியுள்ளார்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், பும்ரா, டிரெண்ட் போல்ட், மிட்செல் மெக்லனகன், தவால் குல்கர்னி, ஷ்ரெஃபேன் ரூதர்ஃபோர்டு, கிறிஸ் லின், சவுரப் திவாரி, திக்விஜய் தேஷ்முக், ப்ரின்ஸ் பல்வாண்ட் ராய் சிங், மோசின் கான், ஜெயந்த் யாதவ், ஆதித்ய தரே, அன்மோல்ப்ரீத் சிங், அனுகுல் ராய்.
undefined
click me!