ஐபிஎல் 2020: ஆர்சிபியை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத அகார்கர்.. பிளே ஆஃப் லிஸ்ட்டில் புறக்கணிப்பு

First Published Sep 18, 2020, 7:02 PM IST

ஐபிஎல் 13வது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனில் எந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன.
undefined
அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் தான் களம் காணும். ஆனாலும் இந்த சீசனில் எந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
undefined
அந்தவகையில், அஜித் அகார்கரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் முதல் அணியாக 4 முறை கோப்பையை வென்ற அணியும் நடப்பு சாம்பியனுமான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸை தேர்வு செய்துள்ளார்.
undefined
2வது அணியாக ஸ்மித் தலைமையிலான, பட்லர், ஸ்டோக்ஸ் போன்ற பெரும் ஜாம்பவான்களை கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அகார்கர் தேர்வு செய்துள்ளார். கண்டிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் என தெரிவித்துள்ளார்.
undefined
3வது அணியாக தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணியை அகார்கர் தேர்வு செய்துள்ளார்.
undefined
4வது அணியாக ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கேவை கூறியுள்ளார் அகார்கர். சிஎஸ்கேவை கடைசியாகத்தான் தேர்வு செய்தார்.
undefined
முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும், இந்த சீசனில் அணி வலுவான காம்பினேஷனில் இருப்பதாக நம்பி மகிழ்ச்சியுடன் இருக்கும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியை ஒரு பொருட்டாக கூட அகார்கர் மதிக்கவில்லை.
undefined
click me!