சிஎஸ்கேவிற்கு பெரிய சவாலே அந்த ஒரு விஷயம் தான்.. ஆனால் அதுலயும் நாங்க கெத்துதான்.. மார்தட்டும் ஃப்ளெமிங்

First Published Sep 18, 2020, 7:42 PM IST

ஐபிஎல் 13வது சீசன் நாளை(சனிக்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் சவால் என்னவென்று தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே 4 முறை டைட்டிலை வென்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் 3 முறை சாம்பியனான சிஎஸ்கேவும் மோதுகின்றன.
undefined
சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். கடந்த சீசனின் ஃபைனலில் மோதிய இந்த இரு அணிகளும்தான் இந்த சீசனின் முதல் போட்டியிலும் மோதவுள்ளன. இரு அணிகளுமே முதல் போட்டிக்கு தயாராகவுள்ளன.
undefined
இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் அந்த அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவருமே ஆடவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், இருக்கும் வீரர்களை வைத்தே கெத்து காட்டலாம் என்பதில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி உறுதியாகவுள்ளது.
undefined
ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்கள் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இம்ரான் தாஹிர், ஜடேஜா, பியூஷ் சாவ்லா, மிட்செல் சாண்ட்னெர் என தரமான, அனுபவம் வாய்ந்த ஸ்பின் பவுலிங்கை பெற்றிருப்பது, சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனுக்கான அனுகூலமாகவே அமைந்துள்ளது.
undefined
சிஎஸ்கே 4வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கான சவால் என்னவென்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டீஃபன் ஃப்ளெமிங், சரியான அணி காம்பினேஷனை தேர்வு செய்வது அனைத்து அணிகளுக்குமே சவாலான விஷயம் தான். சிறந்த, திறமையான வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். திறமையான வீரராகவே இருந்தாலும் கூட சிலருக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே சரியான அணி காம்பினேஷனை தேர்வு செய்வதுதான் கடும் சவாலான காரியம்.
undefined
அணி காம்பினேஷனை தேர்வு செய்வது சவாலான காரியம் தான் என்றாலும், அதில் நாங்கள் நல்ல ரெக்கார்டை வைத்துள்ளோம். அணி காம்பினேஷனை தேர்வு செய்வது எங்களுக்கு கை வந்த கலை. நாங்கள் துபாயில் இருந்தோம். முதல் போட்டி அபுதாபியில் நடக்கிறது. எனவே அபுதாபி கண்டிஷனை ஆராயாமல், ஆடும் லெவனை தேர்வு செய்வது கடும் சவாலான காரியம் என்று ஃப்ளெமிங் தெரிவித்தார்.
undefined
click me!