DC vs LSG நேரலை: ஐபிஎல் என்றால் அதிரடி கிரிக்கெட் தான். நான்காவது போட்டியில் அது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது. விசாகப்பட்டினத்தில் திங்களன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது.
Lucknow Super Giants, Axar Patel, Rishabh Pant, Delhi Capitals
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி சற்று தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Nicholas Pooran, Mitchell Marsh
ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) அதிரடியாக விளையாடினார். அவருக்கு நிகோலஸ் பூரன் (Nicholas Pooran) பக்கபலமாக இருந்தார். மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். மறுபுறம், நிகோலஸ் 30 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தில் 6 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும்.
Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2025
ஆனால் கேப்டன் ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்தார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 27 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார், மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
IPL 2025, DC vs LSG, Indian Premier League
ஆயுஷ் பதோனி 4 ரன்களும், ஷாபாஸ் அகமது 9 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (dc vs lsg live update) அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது.
LSG vs DC, Mitchell Marsh
டெல்லி அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். விப்ராஜ் நிகம் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
Lucknow Super Giants vs Delhi Capitals
போட்டி சுருக்கம்: முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலன்ஸ் பூரனின் அதிரடியால் லக்னோ 209 ரன்கள் குவித்தது.