அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிசி 208 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடியாக எல்எஸ்ஜி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடந்த 5 போட்டிகளில் டெல்லி 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் லக்னோ 3 தோல்விகளையும், 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் 11: ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் படேல் (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், குல்தீப் யாதவ், சமீர் ரிஸ்வி, மோஹித் சர்மா, டி நடராஜன், மிட்செல் ஸ்டார்க்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் 11: அர்ஷின் குல்கர்னி, மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், ஷர்துல் தாக்கூர், ராஜவர்தன் ஹங்கரேகர், ஷமர் ஜோசப்.