நிதானமாக ஆரம்பித்து முயல் வேகத்தில் முடித்த LSG: தீபக் கூடா, கேஎல் ராகுல் அதிரடியால் LSG 196 ரன்கள் குவிப்பு!

First Published | Apr 27, 2024, 10:24 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 43ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்துள்ளது.

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

ஐபிஎல் 2024 தொடரின் 44ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்து 196 ரன்கள் குவித்தது.

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குயீண்டன் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் கேப்டன் கேஎல் ராகுல் உடன் தீபக் கூடா ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டினார்.

Tap to resize

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் குவித்தது. இதில், தீபக் கூட 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த போட்டியில் அரைசதம் அடித்த நிலையில், 31 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

அதன் பிறகு வந்த நிக்கோலஸ் பூரன் 11 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசியில் கேஎல் ராகுல் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 2 பவுண்டரி உள்பட 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆயுஷ் பதோனி 18 ரன்னும், குர்ணல் பாண்டியா 15 ரன்னும் எடுக்கவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.

Lucknow Super Giants vs Rajasthan Royals, 44th Match

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்த வரையில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest Videos

click me!