
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில், டாஸ் வென்று லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி கேஎல் ராகுல் மற்று குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குயீண்டன் டி காக் 19 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் கலீல் அகமது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தேவ்தத் படிக்கலும் 3 ரன்களில் அதே மாதிரி எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 8 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரை வீசிய நிலையில் அந்த ஓவரின் 3ஆவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்திலேயே கூக்ளியில் நிக்கோலஸ் பூரன் கோல்டன் டக் முறையில் கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த தீபக் கூட 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக லக்னோ அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மீண்டும் வந்த குல்தீப் யாதவ் கேப்டன் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். நடுவர் அவுட் தர மறுக்க ரிஷப் பண்ட் ரெவியூ கேட்டார். பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக குல்தீப் யாதவ் 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசியில் எஞ்சிய 2 ஓவர்களையும் வீசி 20 ரன்களில் ஓவரை முடித்தார். குர்ணல் பாண்டியாவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 12.6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து தடுமாறியது. கடைசியில் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷாத் கான் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
இதில் ஆயுஷ் பதோனி 31 பந்துகளில் அரைசதம் அடித்து லக்னோ அணிக்கு ஆறுதல் கொடுத்தார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று அர்ஷாத் கான் 16 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 6ஆவது விக்கெட்டிற்கு அதிகபட்சமாக 73* ரன்கள் பார்ட்னர்ஷிர் எடுத்துக் கொடுத்து அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.
இதே போன்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8 விக்கெட்டிற்கும் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷாத் கான் இருவரும் 73* ரன்கள் பார்ட்னர்ஷிர் எடுத்துக் கொடுத்துள்ளனர். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியே 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.