குல்தீப் யாதவ் வச்சு காய் நகர்த்திய டெல்லி கேபிடல்ஸ் – தரமான ரெவியூ கேட்டு ராகுல் விக்கெட்டை எடுத்த ரிஷப்!

First Published | Apr 12, 2024, 9:18 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 26ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது குல்தீப் யாதவ் சுழலுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துள்ளது.

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான 26ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி கேஎல் ராகுல் மற்று குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

LSG vs DC 26th IPL 2024

இதில், குயீண்டன் டி காக் 19 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் கலீல் அகமது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கலும் 3 ரன்களில் அதே மாதிரி எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார்.

Tap to resize

Kuldeep Yadav 3 Wickets

இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 8 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரை வீசிய நிலையில் அந்த ஓவரின் 3ஆவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

அடுத்த பந்திலேயே கூக்ளியில் நிக்கோலஸ் பூரன் கோல்டன் டக் முறையில் கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த தீபக் கூட 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக லக்னோ அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Nicholas Pooran, Kuldeep Yadav

மீண்டும் வந்த குல்தீப் யாதவ் கேப்டன் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். நடுவர் அவுட் தர மறுக்க ரிஷப் பண்ட் ரெவியூ கேட்டார். பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக குல்தீப் யாதவ் 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

கடைசியில் எஞ்சிய 2 ஓவர்களையும் வீசி 20 ரன்களில் ஓவரை முடித்தார்.  குர்ணல் பாண்டியாவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 12.6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து தடுமாறியது. 

Latest Videos

click me!