Prithvi Shaw Dream House
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் பிரித்வி ஷாவும் ஒருவர். அதிரடிக்கு பெயர் போன பிரித்வி ஷா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்றும் சொல்லப்படுகிறார். இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.
Delhi Capitals Prithvi Shaw
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக டெல்லி அணியில் இடம் பெற்றார். அந்தப் போட்டியில் 10 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 20ஆவது ஐபிஎல் போட்டியில் இடம் பெற்று விளையாடி 66 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார்.
Prithvi Shaw Bandra Dream House
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனவு இல்லம் பற்றி பகிர்ந்திருந்தார். அதைப் பற்றி ஹோம் டூராக பார்க்கலாம் வாங்க. மும்பையில் பாந்த்ராவில் ரூ.10.5 கோடி மதிப்பிலான கனவு இல்லத்தை கட்டியிருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
Prithvi Shaw Dream Home
முதல் படத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. பின்னர், 2ஆவது படத்தில் மிகப்பெரிய ஹால்வேயில் அமர்ந்திருந்தார். அவரது வீடு அழகான ஷோபாக்களுடன் புதுப்பிக்கப்பட்டது. மேலும், வண்ண விளக்குகள், அழகான தரைவிரிப்புகள், சீலிங், இண்டீரியர் என்று ஒவ்வொன்றையும் அழகாக இருக்கும் வகையில் பார்த்து பார்த்து கனவு இல்லத்தை உருவாக்கியிருக்கிறார்.
Prithvi Shaw Delhi Capitals
இந்த கனவு இல்லத்தின் மதிப்பு மட்டும் ரூ.10.5 கோடி. இந்த கனவு இல்லம் மும்பையில் பாந்த்ராவில் உள்ளது. தனது கனவு இல்லம் குறித்து பிரித்வி ஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த தருணத்தை பற்றி கனவு காண்பது முதல் அந்த வாழ்க்கையை வாழ்வது வரை பயணமானது உண்மையற்றது. எனது சொர்க்கத்தை கண்டுபிடித்ததற்கு நன்றி உள்ளவனாக…! நல்ல காலம் உதிக்கட்டும். இந்த அற்புதமான வடிவமைப்பின் பின்னணியில் உள்ளவர்களை குறிப்பிட்டு நன்றி என்றார்.