இறுக்கி பிடிச்ச குஜராத் டைட்டன்ஸ் – ஆமை வேகத்தில் ரன் எடுத்த லக்னோ – 163 ரன்கள் குவித்த LSG!

First Published Apr 7, 2024, 9:58 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 21ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.

Lucknow Super Giants sets 164 runs target for Gujarat Titans

லக்னோவில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் செய்தார். அதன்படி குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், குயீண்டன் டி காக் முதல் ஓவரில் சிக்ஸ் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

LSG, Quinton de Kock

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேஎல் ராகுல் உடன் இணைந்து ரன்கள் சேர்த்தார். பொறுமையாக விளையாடிய ராகுல் 3 பவுண்டரி உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் தன் பங்கிற்கு அரைசதம் அடித்து 53 ரன்களில் நடையை கட்டினார்.

LSG vs GT, IPL 21st Match

ஆயுஷ் பதோனி 20 ரன்களில் ஆட்டமிழக்க, நிக்கோலஸ் பூரன் கடைசியில் 22 பந்துகளில் 3 சிக்ஸ் உள்பட 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் உமேஷ் யாதவ், தர்ஷன் நீலகண்டே தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரஷீத் கான் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

click me!