லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீரர்களின் அழகான பவர்புள் ஜோடி யார் யார் தெரியுமா?

First Published | Apr 19, 2024, 8:19 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 34ஆவது லீக் போட்டி இன்று நடக்க உள்ள நிலையில், லக்னோ அணியிலுள்ள வீரர்களின் அழகான மனைவிமார்கள் யார் யார் என்று பார்க்கலாம்…

Lucknow Super Giants:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இன்று விளையாடுகிறது. அதற்கு முன்னதாக லக்னோ அணி வீரர்களின் அழகான குடும்பம் பற்றி பார்க்கலாம் வாங்க. இதுவரையில் லக்னோ விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

KL Rahul and Athiya Shetty

கேஎல் ராகுல் – அதியா ஷெட்டி:

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இருவீட்டாரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதியா ஷெட்டி வேறு யாருமில்லை, அவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். இவர்களது திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து நடைபெற்றது.

Tap to resize

Krunal Pandya and Pankhuri Sharma

குர்ணல் பாண்டியா – பன்குரி சர்மா:

பன்குரி சர்மா ஒரு சிறந்த மாடல். கவர்ச்சி மற்றும் கருணை இரண்டும் சேர்ந்த கலவையாக குர்ணல் பாண்டியாவின் வாழ்க்கையில் திகழ்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

Quinton de Kock and Sasha Hurly

குயீண்டன் டி காக் – சாஷா ஹர்லி:

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரரான குயீண்டன் டி காக் கடந்த 2016 ஆம் ஆண்டு சாகச விரும்பியான சாஷா ஹர்லியை திருமணம் செய்து கொண்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறார்.

Nicholas Pooran and Katrina Miguel

நிக்கோலஸ் பூரன் – கத்ரீனா மிகுவல்:

அலிசா மிகுவல் என்றும் அழைக்கப்படும் கத்ரீனா மிகுவல், தனது கணவர் நிக்கோலஸ் பூரனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறார். கடந்த ஜூன் 1, 2021 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

Ashton Turner and Krystenna Newbery

ஆஷ்டன் டர்னர் - கிரிஸ்டென்னா நியூபெரி

லக்னோ அணியில் இடம் பெற்றவர் ஆஷ்டன் டர்னர். இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு கிரிஸ்டென்னா நியூபெரி பக்க பலமாக இருக்கிறார்.

Matt Henry and Holly Carran

மேட் ஹென்றி – ஹோலி காரன்:

லக்னோ அணியில் இடம் பெற்றவர் மேட் ஹென்றி. ஆனால், இதுவரையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு மேட் ஹென்றி மற்றும் ஹோலி காரன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Shamar Joseph and Trishana Joseph

ஷமர் ஜோசப் - த்ரிஷானா ஜோசப்

ஷமர் ஜோசப்பின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு த்ரிஷானா ஜோசப் பக்க பலமாக இருந்து வருகிறார். இருவருக்கும் இடையில் விட்டுக் கொடுத்து செல்லும் தன்மை, பரஸ்பர மரியாதை, அர்ப்பணிப்பு இருவருக்கும் இடையில் அழியாத பிணைப்பை உருவாக்குகிறது.

Latest Videos

click me!