மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 33ஆவது லீக் போட்டியில் அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் கடைசியாக 9 ரன்களில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 7 போட்டிகளில் 2ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.
211
Punjab Kings 2024
அதிலேயும், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் முறையே 4, 2, 3 மற்றும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியைல் 2ஆவது அல்லது முதலிடம் பிடித்திருக்கும்.
311
Ashutosh Sharma
இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் 4 போட்டிகளில் இடம் பெற்று முறையே 31, 33*, 31, 61 என்று மொத்தமாக 156 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தனது அதிரடியால் அடுத்தடுத்த போட்டிகளில் இடம் பெற்று வருகிறார்.
411
IPL 2024
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 33ஆவது ஐபிஎல் போட்டியில் 28 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், அவர் மட்டும் அவுட்டாகாமல் இருந்திருந்தால் பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும்.
511
Ashutosh Sharma
பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அஷுதோஷ் சர்மா யார்?
மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் பகுதியைச் சேர்ந்தவர் அஷுதோஷ் சர்மா. இவரது அப்பா, ராம்பாபு சர்மா ரத்லம் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிகிறார். அம்மா ஹேமலதா. மேலும், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், தனது தேவைகளை தானே பார்த்து வந்துள்ளார்.
611
PBKS
கடந்த 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கிரிக்கெட் வாழ்க்கைக்கு எங்கு செல்வது என்றே தெரியாமல் தொடர்ந்து போராடி வந்தார். மத்திய பிரதேச அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் பொறுப்பேற்றார்.
711
Ashutosh Sharma, Punjab Kings, IPL 2024
அவரால் கவனிக்கப்படாமல் போனதால என்னவோ தொடர்ந்து வாய்ப்பிற்காக போராடினார். இது குறித்து அண்மையில் அவர் கூறியிருப்பதாவது: நான் ஜிம்மிற்கு சென்று எனது ஹோட்டல் அறைக்கு திரும்புவேன்.
811
Punjab Kings, IPL 2024
நான் மன உளைச்சலில் இருந்த போது எனது தவறு என்னவென்று யாரும் என்னிடம் சொல்லவே இல்லை. மத்திய பிரதேச அணியில் ஒரு புதிய பயிற்சியாளர் சேர்ந்தார். அவருக்கு விருப்பு வெறுப்புகள் அதிகமாக இருந்தன.
911
PBKS, IPL 2024
ஒரு பயிற்சி போட்டியில் 45 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த போதிலும் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார். சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் அஷூதோஷ் சர்மா, 3 அரைசதங்கள் அடித்திருந்த போதிலும் தலைமை பயிற்சியாளரால் அவரால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்.
1011
Ashutosh Sharma
அஷுதோஷ் சர்மாவிற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் அவரது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டு சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் 11 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங்கின் அதிவேக டி20 அரைசதம் என்ற சாதனையை முறியடித்தார்.
1111
Ashutosh Sharma, IPL 2024
இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் கவனத்திற்கு வந்துள்ளார். அதன் பிறகு கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.