நடராஜன், அஸ்வின், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் உள்ளிட்ட 11 தமிழக வீரர்கள் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல்

First Published | Apr 19, 2024, 11:37 AM IST

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் தழிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன், நடராஜன் உள்ளிட்டோர் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

IPL 2024 Players Tamilnadu Vote, Elections 2024

மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் என்று மொத்தமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tamilnadu Players in IPL 2024

இதில், சாதாரண மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரையில் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், தான் தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில், இடம் பெற்றுள்ள தமிழக வீரர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Lok Sabha Elections 2024

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன், ஷாருக் கான், சித்தார்த் மணிகண்டன், விஜய் சங்கர், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி, நடராஜன், வெங்கடேஷ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் என்று மொத்தமாக 11 வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

Elections 2024

ஆனால், இன்று நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 34ஆவது லீக் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில், லக்னோ அணியில் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் இடம் பெற்று விளையாடுகிறார். மிக முக்கியமான போட்டி என்பதால் அவர் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Dinesh Karthik 2024

ஆனால், அவர் தவிர மற்ற தமிழக வீரர்களுக்கு இன்று எந்த போட்டியும் இல்லை. ஆதலால், அவர்கள் தமிழகம் வந்து வாக்களிக்கலாம். ஆனால், அவர்கள் வருவதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். விமானம் உரிய நேரத்தில் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Vijay Sankar IPL 2024

மேலும், தமிழகம் வந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுவதோடு பயிற்சியிலும் பங்கேற்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இது போன்ற காரணங்களால் 11 தமிழக வீரர்கள் இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

LokSabha Elections 2024

ஆனால், இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரனின் அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Sudharsan, Gujarat Titans

மேலும் ஒரு நாள் மட்டும் அம்மாவை சந்தித்து விட்டு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அஸ்வின் மீண்டும் போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!